ஹாட்ரிக் கூட்டணியில் அஜித்.. நீ என்ன ஹீரோவா.! என் கதையில நான் வில்லன்டா

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் வலிமை படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தில் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்த அஜித்தின் வலிமை படம் வெளியாக உள்ளதால் தல ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அஜித் பைக் ரைடை மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதேபோல் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது தல அஜித் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர், வினோத், அஜித் கூட்டணி போட உள்ளார்கள்.

இந்தப் படத்தில் பில்லா, மங்காத்தா படத்தை போல் வில்லன் ரோலில் அஜித் நடிக்க உள்ளாராம். இந்த இரு படங்களும் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அஜித் வில்லன் ரோலில் நடிக்க உள்ளார்.

மேற்கொண்ட பார்வை மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து வலிமை படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சாதனை படைத்த நிலையில் மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்