வாய் கிழிய பேசி, காத்தாடி விட்ட அஜித்.. காரியத்திற்காக காய் நகர்த்தும் விஷ பூச்சி!

Ajith is not giving funds to the nadigar sangam building: நடிகர் சங்க கட்டடம் என்பது பல ஆண்டுகளாக கனவாகவே இருந்து வருகிறது. இங்கு தேர்தல் நடத்தி புதிய அணி ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் முதல் வாக்குறுதி நடிகர் சங்க கட்டடம் என்பதே! இதற்காகவே நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான பஞ்சபாண்டவ அணியை வெற்றி பெற வைத்தனர் நடிகர்கள். 

ஆரம்ப காலத்தில் பல்வேறு கடன் நெருக்கடி மற்றும் நிதி சுமையால் கஷ்டப்பட்டு வந்த நடிகர் சங்கத்தை விஜயகாந்த், தலைவர் பொறுப்பேற்று சங்கத்தின் கடனை தீர்த்ததோடு, நடிகர் சங்க கட்டிட பேச்சுவார்த்தைக்கும் அடி போட்டார். 

அந்த காலத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித், யாவரும் எதிர்பார்க்காத வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டினால் “நான் 10 லட்சம் தருவேன்” என்று வாக்குறுதி அளித்தார். 

விஷாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டின பிறகு தான் நான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்தார். போதுமான நிதி இல்லாத காரணத்தினால் கட்டிட வேலைகள் தடைப்பட்டு, ஒரு கட்டத்தில் கிடப்பில் போடப்பட்டது. 

இதுகுறித்து தலைவர் நாசர் பேசும்போது வங்கியில் 40 கோடி கடன் கேட்டிருப்பதாகவும், முதல் தவணையாக 25 கோடி வரஉள்ளதாகவும் கூறினார். 

அது மட்டும் இன்றி நடிகர்களிடம் நிதி திரட்டி, கட்டிட வேலையை ஆரம்பிக்கலாம் என்று கூறியபோது முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். இவரை தொடர்ந்து கமல் மற்றும் விஜய் தலா ஒரு கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக்கிடம் கொடுத்தனர்.

அதெல்லாம் போகட்டும் 10 லட்சம் கொடுப்பேன் என்று முதல் ஆளாக காத்தாடி விட்ட அஜித்தின் வாக்குறுதி என்ன ஆச்சு? என்று நடிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தற்போது அஜித் விடாமுயற்சிக்கு விடாமல் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். படம் மேற்கொண்டு வருமான்னு தெரியல. இந்நிலையில் அஜித் முன்பு சொன்ன கருத்தை இப்பொழுது மற்ற நடிகர்கள் அமல்படுத்தி வருகின்றனர். ஆனால் அஜித் இன்னும் கொடுக்கவில்லை. முதல் ஆளா கொடுப்பேன் என்று கூறிய அஜித்தின் வாக்குறுதி, வாய் வார்த்தையோடு முடிந்தது.

விஷாலின் ஓவர் அலப்பறை

முதலில் நிதி கொடுத்த உதயநிதி மற்றும் கமல் அவர்களை விட்டுவிட்டு, விஜய்யின் சப்போர்ட் இல்லாமல் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடையாது என பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு விஜய்யை ஐஸ் வைத்து வருகிறார் விஷால். இதற்கு பின்னால் உள்ள காரணம்தான் என்னவோ? நிதி கொடுக்காத அஜித்தை சீண்டுகிறாரா! அல்லது  விஜய்யின் மீது உள்ள அபிமானமா! எது எப்படியோ விஷாலின் அலப்பறை தாங்க முடியவில்லை, விஷ பூச்சியாவே மாறிட்டாரு போல!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை