ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

சமீபகாலமாக அஜித் ஒரே இயக்குனருடன் தொடர்ந்து கூட்டணி போட்டு வருகிறார். அதாவது இப்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் துணிவு படத்திற்கு முன்னதாக வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் அஜித் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த 3 படங்களுக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் தான். அஜித் வினோத்துடன் கூட்டணி போடுவதற்கு முன்னதாக சிறுத்தை சிவாவுடன் பணியாற்றினார்.

Also Read : அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

அதாவது வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ந்து சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் படம் வெளியானது. பொதுவாக மற்ற ஹீரோக்கள் இவ்வாறு நடிக்க மாட்டார்கள். அப்போது ட்ரெண்டிங்கில் எந்த இயக்குனர் பெரிய அளவில் பேசப்படுகிறாரோ அவரது படத்தை புக் செய்து நடித்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கு மாறாக அஜித் ஒரே இயக்குனருடன் கூட்டணி போடுவதற்கான காரணம் என்ன என்று சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்று இயக்குனர் வினோத் கூறியுள்ளார். அதாவது இதை மிகப்பெரிய பேசுபொருளாக வேண்டிய விஷயமே கிடையாது. சினிமாவை பொருத்தவரையில் இது சாதாரண ஒன்றுதான்.

Also Read : விஜயை ஒழித்து அவர் சாதனையை தடுக்க வேண்டும்.. பகடைக்காயான அஜித்.!

இதற்கு முன்னதாக ரஜினி மற்றும் எஸ் பி முத்துராமன் இணைந்து 25 படங்களுக்கு மேல் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளார்கள். அதேபோல் கமலும் சில இயக்குனர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் யாரும் இதுபோன்று செய்யவில்லை.

அஜித் இப்போது அதை செய்து வருகிறார். இதுவும் பெரிதும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் இல்லை என்று வினோத் கூறியுள்ளார். மேலும் இப்போது வினோத் கூட்டணியிலிருந்து வெளியே வந்த இருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Also Read : அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

- Advertisement -