தூள் கிளப்பும் ரஜினி, அஜித்.. சரவெடியா வந்த லேட்டஸ்ட் அப்டேட்

Ajith is going to clash with Rajini for Diwali and Pongal: பொங்கல் தீபாவளி  பண்டிகை என்றாலே ரசிகர்களுக்கு தலைவர்களின் படங்கள் தான் கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்றால் மகிழ்ச்சியுடன் போட்டியும் பொறாமையும் தொற்றிக் கொள்வது இயல்புதான்.

கடந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலானும், தனுஷின் கேப்டன் மில்லரும் சரிசமமாக மோதி வசூலையும் தெறிக்க விட்டது. அதேபோல் வருகிற  தீபாவளிக்கு ரசிகர்களை குஷி படுத்த இப்பொழுதே ஆயுத்தம் ஆகியுள்ளனர். 

அதன்படி முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சூப்பர் ஸ்டாரின் படங்களை தீபாவளிக்கு இறக்க முடிவு செய்துள்ளனர். 

ஜெயிலரின் மாபெரும் வெற்றிக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார். 

அதேபோல்  கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திற்கு பின் ஒரு வருட காலமாக  மகிழ்திருமேனியின் விடாமுயற்சியில் பிஸியாகி உள்ளார் அஜீத். பல்வேறு தடைகளுக்குப் பின் அஜர்பைஜான் நாட்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது விடாமுயற்சி படப்பிடிப்பு. 

விடாமுயற்சி மற்றும் வேட்டையன் இரு திரைப்படங்களையும் தயாரிப்பது லைக்கா நிறுவனம் தான். இப்போது கடும் நிதி நெருக்கடியில் தவிர்த்து வரும் லைக்காவுக்கு ஆறுதலாக அமைய உள்ளது இந்த தீபாவளி.

குட் பேட் அக்லி ரிலீஸ்

இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் இறக்கி கல்லா கட்டி விட வேண்டும் என்ற நோக்கில் ஸ்கெட்ச் போட்டு உள்ளது. இதனால் மற்ற நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது என்பது கேள்விக்குறிதான்!

அதுமட்டுமின்றி அஜித்தின் அடுத்த படமான  குட் பேட் அக்லி திரைப்படத்தையும் வருகிற 2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என கங்கணம் கட்டி தீவிரமாக உழைத்து வருகிறார் அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன்.  

ஒரு வருடமாக எந்தவித அப்டேட்டும் வராமல் இருந்த அஜித் ரசிகர்களுக்கு குஷியாக அமைய உள்ளது தல தீபாவளியும், தல பொங்கலும்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்