வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நீ என்ன பெரிய ஹீரோவா.? சைக்கோ புத்தியை காட்டிய இயக்குனர், அஜித் முதுகில் விழுந்த அடி

Actor Ajith: அஜித் எப்போதுமே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அதனாலேயே இவரைப் பற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் வந்தது கிடையாது. அப்படி இருந்தும் கூட பிரபல இயக்குனர் ஒருவருக்கும் இவருக்கும் இருந்த பஞ்சாயத்து மீடியாவையே கதி கலங்க வைத்தது.

அது மட்டுமல்லாமல் அவரால் அஜித் உச்சகட்ட அவமானத்திற்கும் ஆளாகி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் கமிட் ஆனது அஜித் தான் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் பல்வேறு மன கசப்புகளின் விளைவாக அதில் ஆர்யா நடித்தார்.

இத்தனைக்கும் அந்த கதாபாத்திரத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து நீளமாக தலைமுடி வளர்த்து பல பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். ஆனாலும் பாலா தன்னுடைய சைக்கோ தனத்தை காட்டி அவரை விலக வைத்திருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அதாவது பாலா எப்போதுமே கதையைப் பற்றி ஹீரோக்களிடம் கூற மாட்டார், ஒன் லைன் மட்டும் தான் சொல்வார். இதுவே அஜித்துக்கு யோசனையாக இருந்திருக்கிறது. ஒரு முறை டிஸ்கஷன் என்று அவரை பாலா ஒரு ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார். அங்கு சென்ற அஜித் படத்தின் கதையை பற்றி கேட்டிருக்கிறார்.

உடனே பாலா தெனாவட்டாக நான் தான் அகோரி கதை என்று சொன்னேனே என்று கூறிவிட்டு அவரை ஆராய்ந்து இருக்கிறார். தலைமுடியை என்னை கேட்காமல் எதற்கு இப்படி வெட்டி வைத்திருக்கிறீர்கள் எனவும் குறுக்கு கேள்வி கேட்டிருக்கிறார். இது அஜித்துக்கு உறுத்தலை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் முற்றி விவாதமாக மாறி இருக்கிறது.

அதனால் அஜித் அந்த இடத்தை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஒருவர் அஜித் முதுகில் ஓங்கி தட்டி நீ என்ன பெரிய ஹீரோவா உட்காருப்பா என்று சொல்லி இருக்கிறார். இது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மேலும் இந்த அவமானத்தால் அவர் 20 நாட்கள் வரை யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தான் நான் கடவுள் படத்தில் இருந்து அவர் விலகினார். இது குறித்து மீடியாக்களில் கூட பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் அஜித் பாலாவை பற்றி தவறாக எழுத வேண்டாம் என சொல்லியதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News