பல நூறு பேருக்கு இப்படி தான் உதவுகிறார் அஜித்.. ஆச்சரியப்பட வைத்த ஜெய்சங்கரின் மகன்

கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித், தனக்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கருடன் தான் அதிக நேரம் செலவிடுவாராம். நடிகர் ஜெய்சங்கர் தன்னுடைய மகன் அழகான தோற்றம் உடையவராகவும் அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தும் தன் மகனை சினிமாவில் நடிக்க அவர் அனுமதிக்கவில்லை.

ஏனென்றால் சினிமா தொழில் என்னோடு போகட்டும். நீ பிறருக்கு கண்ணொளி கொடுத்து அவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் சங்கரை கண் மருத்துவராக உருவாக்கினார். விஜய் சங்கரும் ஏழை எளிய ஊருக்கு இலவசமாக சிறப்பு முகாம் மூலம் கண் சிகிச்சையை மேற்கொள்கிறார்.

Also Read: அஜித்தின் இடம் அடுத்தது கவினுக்கு தான்.. 3 படத்துக்குகே இவ்வளவு பெரிய பில்டப்பா!

இதையெல்லாம் பார்த்த அஜித்தும், நோயாளிகள் ஆப்ரேஷன் செய்ய பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களை திருப்பி அனுப்பாதீர்கள். அந்த நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் நானே செய்கிறேன் என்று பார்சல் பார்சல் ஆக பணத்தை விஜய் சங்கருக்கு அனுப்புவாராம். இந்த விஷயம் எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்றும் ஸ்டெட்டாக அஜித் சொல்லிவிடுவாராம்.

இருப்பினும் தற்போது விஜய் சங்கரின் தம்பி சஞ்சய் சங்கர் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில், மொத்த விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். ‘அஜித் நிறைய பேருக்கு கண் கொடுத்து இருக்கிறார்’ என்று நெகிழ்ச்சியுடன் சஞ்சய் சங்கர் பேசி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் அவருடைய அண்ணன் விஜய் சங்கர் முலம் தான் தனக்குத் தெரியும் என்றும் அஜித்தின் நல்ல குணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Also Read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

இவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல், தல ரசிகர்கள் இதை வைத்து கெத்து காட்டுகின்றனர். மேலும் சஞ்சய் சங்கர் மட்டுமல்ல ராதாரவியும் அஜித்திடம் 20 பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவி செய்யுமாறு கேட்டு இருக்கிறார்.

ஆனால் இருக்கும் அனைவருக்குமே ஆப்ரேஷன் செய்து விடலாம் என்று அஜித் தாராளமாக பண உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தன்னிடம் உதவி என வந்து நின்றால் அவர்களுக்கு மனம் கோணாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அஜித், நிஜமாகவே நல்ல மனசுக்காரர் என்றும் திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.

Also Read: இயக்குனர் முடிவாகியும் தாமதமாகும் ஏகே 62.. அஜித்தால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்