காசு என்னங்க காசு, மனுசங்க தான் முக்கியம்.. மீண்டும் லட்சங்களை அள்ளிவீசிய அஜித்

தற்போது மீண்டும் கொரானா பரவல் அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் அவல மீண்டும் வரத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக பலரிடமும் நிதி வசூல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா ஒரு கோடி, ரஜினி மகள் சௌந்தர்யா ஒரு கோடி, அஜித் 25 லட்சம் என ஏற்கனவே தங்களது பங்குக்கு உதவி செய்து விட்டனர். மேலும் சில முன்னணி நடிகர்களும் விரைவில் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறையே தல அஜித் கோடிக்கணக்கில் உதவி செய்தார் என்பது நினைவிருக்கலாம். அதோடு விட்டு விடாமல் தற்போதும் மக்கள் கஷ்டப்படுவதை அறிந்து 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

அதுபோக தனியாக 10 லட்சத்தை திரைப்பட தொழிலாளர் சங்கங்களுக்கு கொடுத்து உதவி செய்துள்ளார். இது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த வருடமே 1.25 கோடி இதையடுத்து அஜீத் இந்த வருடமும் மொத்தம் 35 லட்சம் வரை உதவி செய்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து வருகிறார். தொழிலாளர்களை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் குடும்பத்தையும் தன் வீட்டில் தங்க வைத்து பராமரித்து வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்