இப்பவும் வாயை திறக்காத அஜித்.. மேடையில் கொந்தளித்த சீமான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் இரண்டு நாள் முன்பு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆன அதிகாலையில் ரோகினி தியேட்டர் முன்பு லாரி மீது ஏறி தன்னுடைய சந்தோஷத்தை நடனத்தின் மூலம் வெளிப்படுத்திய அஜித்தின் ரசிகரான 19 வயது பரத்குமார் தவறி விழுந்து உயிரிழந்தது தல ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையிலும் இதுவரை அஜித் வாய் திறக்காமல் இருப்பது குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் மேடையில் கொந்தளித்துள்ளார். நள்ளிரவு ஒரு மணிக்கு அஜித்தின் படத்தை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தியேட்டர் முன்பு குவிக்கின்றனர்.

Also Read: விளம்பரத்திற்காக மட்டுமே துணிவில் இறக்கி விடப்பட்ட 4 பேர்.. ப்ரோமோஷனுகாக துணிவு செய்த தந்திரம்

இதே தமிழ்நாட்டில் இனத்தின் பிரச்சனை, மண்ணின் பிரச்சனை உன்னுடைய உரிமைக்கான பிரச்சனைக்காக இப்படி திரண்டு வந்திருக்கிறீர்களா? என்றும் இளைஞர்களை பார்த்து கேள்வி எழுப்புகிறார். இதைவிட பசியில் பஞ்சத்தில் வாழும் ஏழை குழந்தைகளுக்கு அரிதில் கிடைக்காத புரதச்சத்து மிகுந்த பாலை பேனரில் குடம் குடமாக ஊற்றும் பைத்தியக்கார செயலை அஜித் எப்படி அங்கீகரிக்கிறார்.

ரசிகர்களை அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பும் தலைவர்களுக்கு தான் உள்ளது. ‘உங்களைப் பின்பற்றி நேசித்துக் கொண்டிருக்கும் பல ரசிகர்களுக்கு, அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்’ என்று அஜித் இடம் பலமுறை சொல்லி இருக்காராம். மேலும் தமிழிசை, அஜித்தை பற்றி சொன்ன கருத்திற்கு மட்டும் உடனடியாக அதை மறுத்து அறிக்கை விட்டார்.

Also Read: 24 மணி நேரத்தில் துணிவு, வாரிசு படக்குழுவை அதிரவைத்த சம்பவம்.. சத்தமே இல்லாமல் காயை நகர்த்திய கருப்பு ஆடு

அது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும் பேனருக்கு பால் ஊற்ற சென்ற வாலிபன் சாரம் சரிந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு துணிவு படத்தை லாரியில் நடனமாடி கொண்டாடிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்தார். இப்படி இவருடைய படங்களுக்கு வரிசையாக ரசிகர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து இதுவரை ஒரு அறிவிப்பையும் அஜித் வெளியிடாமல் இருப்பது ஏன் என்றும் மேடையில் சீமான் கொந்தளிக்கிறார்.

இதுமட்டுமின்றி அஜித்தின் பேனருக்கு ஆட்டுக்குட்டியை அறுத்து தலையை துண்டாக்கி அந்த ரத்தத்தை அவருடைய உருவப்படத்தில் தெளிக்கின்றனர். இதெல்லாம் என்ன கொடுமை. அத்துடன் நாக்கில் சூடத்தை வைத்து சுற்றியும் அஜித்தின் உருவப் படத்திற்கு அலப்பறை செய்கின்றனர்.

Also Read: வாரிசில் தெறிக்கவிட்ட ஒரே ஒரு அரசியல் வசனம்.. அஸ்திவாரத்தை ஆழமாக போட்ட விஜய்

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் யாரும் இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் செய்வதில்லை. அறம், வீரம், மானத்திற்கு என்றே வாழ்ந்த தமிழர் கூட்டம் இவ்வளவு கேவலமாக கேடுகெட்டு போன நிலைமை எவ்வளவு அசிங்கமானது என விமர்சித்த சீமான். இதற்கு தல ரசிகர்கள் ‘தம்பின்னு சொல்ற விஜய் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்களே!’ என நக்கலாக கமெண்ட் செய்கின்றனர்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -