ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு கட்டத்தில் விக்ரமை தூக்கி விட்ட அஜித்.. இந்தப் படத்துக்கு பிறகு தான் கேரியர் டாப்ல வந்துச்சு

நடிகர் விக்ரம் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் அதற்கு ஏற்ற மாதிரி தோற்றத்தை மாற்றிக் கொண்டு படங்களில் வெற்றியை பார்க்கக் கூடியவர். அத்துடன் இவற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாபாத்திரமும் தான்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் வெற்றியை பார்க்க முடியாமல் சொதப்பிய படங்களும் இருக்கிறது. அதாவது இவர் சினிமாவில் நுழைந்த நேரத்தில் என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்களின் மூலம் தொடர்ந்து சோதனை மட்டுமே பார்த்தவர். அதன் பிறகு இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிற்கு நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

Also read: செக் இல்ல பணப்பெட்டியோடு வந்தா பாருங்க.. அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கஜானாவை நிரப்பும் நடிகர்

ஆனால் அங்கேயும் இவருக்கு வெற்றி கைகூடவில்லை. இதனால் சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவிற்கு போய்விட்டார். அப்போதுதான் அஜித், உல்லாசம் என்ற படத்தில் கதையைக் கேட்டு கமிட்டாகி இருந்தார். அப்பொழுது இயக்குனர் அஜித்திடம் உங்களுக்கு இணையாக நடிகர் விக்ரம் நடிக்க வைத்தால் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அஜித் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஏனென்றால் விக்ரமும் இவரை போலவே சினிமாவில் எந்த பிரபலங்களின் சப்போட்டும் இல்லாமல் தனியாக போராடி தவித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைக் கைதூக்கி விடும் அளவிற்கு இந்த படம் அவருக்கு அமைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். அத்துடன் அஜித், என்னை விட ஒரு பங்கு மேலாகவே அவருக்கு காட்சிகள் அமைந்தாலும் எனக்கு சம்மதம் என்று கூறியிருக்கிறார்.

Also read: வேர்ல்ட் டூரை தள்ளி வைத்த அஜித்.. லியோ காட்டிய பயத்தால் விரைவில் வெளிவர உள்ள ஏகே 62 அப்டேட்

அதேபோலவே உல்லாசம் படத்தில் அஜித்தை விட விக்ரம் அதிக அளவில் ஸ்கோர் பண்ணி இருப்பார். இதனால் விக்ரம் பெரும் மகிழ்ச்சி அடைந்து அஜித்தை புகழ்ந்து இருக்கிறார். அதாவது உங்களைப் போல் சினிமாவில் நான் யாரையும் சந்தித்ததில்லை. இதுவரை நான் துரோகம் செய்தவர்களை மட்டும் தான் சினிமாவில் பார்த்திருக்கிறேன். என்கிட்ட ஒரு விதமாகவும் முதுகுக்கு பின்னாடி ஒரு விதமாகவும் பேசியவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் நீங்கள் வித்தியாசமாக இருப்பது எனக்கு பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது என்று விக்ரம் கூறி இருக்கிறார். உடனே அஜித் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது நீங்கள் சினிமாவிற்கு வந்து முயற்சி செய்து என்னை விட பெரிய ஆளாக வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை தான் அவரை அதிக அளவில் உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அவரின் அடுத்த படங்களான சேது, தில், தூள் போன்ற படங்களில் வெற்றி பெற்று இப்பொழுது முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார்.

Also read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

- Advertisement -

Trending News