உயரத்திலும், அழகிலும் ஷாலினியை தூக்கி சாப்பிட்ட மகள்.. ஜம்முனு வைரலாகும் புகைப்படம்

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை திரை பிரபலங்கள் தங்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள். அந்த வகையில் தல அஜித் இந்த தீபாவளியை தன் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. தல அஜித்தின் வீட்டில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் புகைப்படங்கள் முதலில் வெளியானது. ஷாம்லி தனது அக்கா ஷாலினி, ஷாலினியின் மகள் அனோஷ்கா உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஷாலினி, ஷாம்லி, அனோஷ்கா மூவரும் தோழி போல் உள்ளார்கள். அனோஷ்காவின் சிறுவயது புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் இப்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்து தல ரசிகர்கள் அஜித்துக்கு இவ்வளவு பெரிய மகளா என வியப்பில் உள்ளார்கள்.

தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தார்கள். ஆனால் இந்த தீபாவளியில் தல குடும்பத்தின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானதால் தல ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

shalini-ajith-daughter
shalini-ajith-daughter
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்