சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

துணிவை விட 30 கோடி அதிகமாக சம்பளம் வாங்கும் அஜித்.. ஆனாலும் இவங்க ரெண்டு பேரு தான் டாப்பு

Ajith Vidamuyarchi Salary: இந்த வருடம் பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஒன்றாக ரிலீசாகி விஜய் படத்தை விட அஜித் படத்திற்கு அதிக வசூல் கிடைத்தது. இப்படத்தில் மூன்றாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்தார். இதை போனி கபூர் மிகப் பிரமாண்டமாக 200 கோடி செலவில் தயாரித்து,  250 கோடி லாபத்தை பார்த்தார். அந்த வகையில் இப்படத்தில் அஜித்துக்கு 70 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது இவருடைய 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இவருக்கு ஜோடியாக த்ரிஷா கமிட் ஆகியிருக்கிறார். பல மாதங்களாக இழுவையில் இழுத்தடித்த நிலையில் தற்போது தான் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் இவருடைய சம்பளத்தை 35 கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கிறார். அந்த வகையில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் 105 கோடி உயர்ந்திருக்கிறது. இவரை பொருத்தவரை வேண்டுமென்றால் சம்பளம் அதிகரித்து இருக்கலாம், ஆனால் இவருடைய போட்டியாளரான விஜய்யை விட அஜித்துக்கு சம்பளம் கம்மிதான்.

இதுல இவர்கள் இருவரும் போட்டி போட்டு வேற யாரையும் முந்தவிடாமல் டாப்ல இருக்காங்க. ஒருவேளை விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவை விட அதிக லாபத்தை வசூலித்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் எகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் விஜய் மற்றும் ரஜினி சம்பளத்தை தொட்டு விடுவார்.

இதற்கிடையில் அஜித்தை வைத்து எப்படியாவது தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கலாநிதி மாறன் சுற்றி கொண்டு வருகிறார்.  அஜித் மட்டும் ஓகே என்று அவருடைய சம்மதத்தை கொடுத்தால் இப்ப வாங்குற சம்பளத்தை விட இன்னும் அதிகமாகவே கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தை கலாநிதி மாறன் தயாரித்தால் கண்டிப்பாக இவருடைய சம்பளம் 170 கோடி வரை தொட்டு விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் மூலம் அஜித் உடைய கேரியர் மட்டும் இல்லாமல் சம்பளமும் அதிகரித்துக் கொண்டே வரப்போகிறது.

- Advertisement -

Trending News