எவளோ முயன்றும் அஜித்தால் முடியவில்லை.. ஆனா கில்லி மாதிரி சொல்லி அடித்த விஜய்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இரு துருவங்களாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களிடையே திரையரங்குகளில் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகும் தினத்தன்றே கடும் போட்டி நிலவுவதால் வழக்கம்.

அந்த வகையில் தற்போது தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலன்று ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.

அதேபோன்று தளபதி விஜயின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு காத்திருக்கிறது. இந்த படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

எனவே தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் தமிழ் மட்டுமல்லாமல் அவருக்குத் தெரியாத பரிச்சயம் ஆகாத தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அவரே டப் செய்திருக்கிறார் நடனம் பாடல் நடிப்பு என ஆல்-ரவுண்டராக இருக்கும் தளபதி விஜய் தற்போது அவருடைய படத்தில் பிற மொழிகளுக்கு அவரே அவருடைய சொந்த குரலில் டப்பிங் செய்திருப்பது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு நாள் தல அஜித் தன்னுடைய படத்திற்கு பிறமொழிகளில் டப்பிங் செய்ய முயற்சித்தாலும், தற்போது தளபதி விஜய் அதனை அசால்டாக செய்திருப்பதை வைத்து தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

அத்துடன் முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் ராணுவ கமாண்டராக நடிக்கும் தளபதி விஜய், பிறமொழிகளில் அவரது சொந்தக் குரலில் எவ்வாறு டயலாக் பேசுகிறார் என்பதைப் பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்