திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

போற இடமெல்லாம் சக்சஸ் தான்.. திருச்சி துப்பாக்கிச்சூடும் போட்டியில் அஜித்க்கு இத்தனை பதக்கங்களா.?

நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைட் போன்ற தனக்கெனத் தனி திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் கடந்த இரண்டு வருடங்களாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் தல அஜித்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் திருச்சியில் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 27ம் தேதி தல அஜித் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவுகளில் கலந்து கொண்டார். இவரை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் போட்டி நடக்கும் இடத்தில் பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் குவிந்தனர்.

அதன்பிறகு அவர்களைப் பார்த்து கையசைத்து, ரெண்டு கையையும் இணைத்து முத்தமிட்டு ரசிகர்களிடம் அன்பை தெரிவித்தார். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அவர் போட்டியில் கலந்து கொண்ட வீடியோவும் இணையத்தை கலக்கியது.

இன்னிலையில் இந்த போட்டியில் மட்டும் நடிகர் அஜித்குமாரின் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி கொடிகட்டிப் பறக்கும் அஜித், விளையாட்டு வீரராக கலக்கிக் கொண்டிருப்பதால் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. அவர் போற இடமெல்லாம் சக்சஸ் தான்.

ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அலப்பறை செய்து கொண்டிருக்கும் தல அஜித் ரசிகர்கள் தற்போது சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித்குமாரின் அணி பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடுவதில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றதை வைத்து கெத்து காட்டுகின்றனர்.

ajith-certificate
ajith-certificate
- Advertisement -

Trending News