அஜித் சக நடிகர்களுடன் செய்யும் அலப்பறை.. அடப் போங்கய்யா என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ajith bike ride tour in vidaamuyarchi shooting break: பொருளற்ற வாழ்க்கையில் பொருளுக்காக அலையும் மனிதர்களின் மத்தியில் தனித்து உயர்ந்து நிற்கும் அஜித், ஒரு சாமானியனாக செய்யும் வேலையை பாருங்க..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட் சுடச்சுட வந்து கொண்டிருக்க ஒரு வருட காலமாக விடாமுயற்சி பற்றிய எந்த ஒரு தகவலும் கசியாமல் ரகசியமாய் வைத்திருக்கின்றனர் படக் குழுவினர். 

துணிவின் வெற்றிக்கு பின் லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் மகழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள திரைப்படமே விடா முயற்சி. 

வெற்றி இயக்குனர், முன்னணி நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என அனைத்தும் பிளஸ் ஆக இருந்த போதும், தாமதமான படப்பிடிப்பு,  ஒளிப்பதிவாளர் மாற்றம், கலை இயக்குனர் மரணம் என அடுத்தடுத்த தடைகளால்  நொறுங்கிப் போனது விடாமுயற்சி. 

நிதி நெருக்கடி காரணமாக விடாமுயற்சிக்கு விடுமுறை கொடுத்தது லைக்கா. இதனை பயன்படுத்திக் கொண்டு, சக கலைஞர்களுடன் பைக்  டூர் கிளம்பிவிட்டார் நம்ம தல. 

அப்டேட் தான் கொடுக்கவில்லை, பைக் டூரையாவது ட்ரெண்டிங் ஆக்கலாம் என்கின்ற முயற்சியில் அவரது புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா.

காட்டுப்பகுதியில் பைக் ரைடு செய்து வரும் அஜித்

மத்திய பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அஜித், ஆரவ் மற்றும் சக கலைஞர்கள் பைக் ரைடு செய்வது, விளையாடுவது, சமைப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில்  டிரெண்டிங் ஆகி வருகிறது. 

அது மட்டும் இன்றி “இன்றைய வகுப்பு” என்கிற பெயரில் பைக் ரைட் பற்றிய குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார் அஜித்,

அதிக லைக்ஸ்களை குவித்து வரும் இந்த வீடியோவை பற்றி, இங்கு அவரை நம்பி ரசிகர் கூட்டமே இருக்க  ஜாலியா ஊர் சுற்றிவரார், இதுல கிளாஸ் வேற என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

பொருளின் பின்னால் சுற்றாமல் தன்னம்பிக்கையை மட்டுமே தலைக்கனம் ஆக்கி வாழ்வின் பொருளைத் தேடி சுற்றும், இந்த தமிழ் அழகிய மகனின் சந்தோஷ பயணம் தொடர்வதாக..!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்