சின்ன விஷயத்திற்காக ரொமான்ஸ் சீனை தூக்க சொன்ன அஜித்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரகசியம்

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம், 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி தாறுமாறாக வெற்றி பெற்றது. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன விஷயத்துக்காக அஜித் ரொமான்ஸ் சீனை தூக்கச் சொன்ன சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. அஜித் இந்த படத்தில் இரட்டை சகோதரர்களான ஜீவா, தேவா என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார்.

மேலும் தேவா காது கேட்காத ஊமையாக நடித்திருப்பார். ஜீவா சிம்ரனை காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஒரே வீட்டில் இரட்டை அண்ணன் தம்பிகள் இருப்பதால், ஒரு தடவை சிம்ரன் தெரியாமல் ஜீவா என நினைத்து தேவாவை கட்டிப்பிடித்து விடுகிறார். அதே சமயம் தேவாவும் சிம்ரனை தம்பியின் மனைவி என்று கூட பார்க்காமல் அவரை அடைய நினைப்பார்.

Also Read: அந்த 3 சம்பவங்களால் மொத்தமாக மாறிய அஜித்.. பிரபலங்களின் இறப்பிற்கு கூட வராத காரணம்

இந்த சுச்சுவேஷனில் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா சூப்பர் சீன் ஒன்றை எடுக்க வேண்டும் என பிளான் போட்டார். அதாவது அண்ணன் தம்பிகளுக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பித் தவிக்கும் சிம்ரன் படுக்கையில் அழுது கொண்டே படுத்திருக்கிறார். அப்போது ஜீவா தன்னுடைய மீசையை நீக்கி, அண்ணனுக்கும் தம்பிக்கும் வித்தியாசம் காட்டி சிம்ரனின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தனக்காக தான் ஜீவா மீசையை நீக்கிவிட்டார் என்ற சந்தோசத்தில் சிம்ரன் ஜீவாவை இறுக்கி கட்டி பிடிக்கும் ரொமான்ஸ் சீன் அது. பிறகு மீசையை நீக்கிவிட்ட விஷயத்தை தேவாவிடம் சொல்ல வேண்டும் என ஜீவா விரைந்து செல்கிறார். ஆனால் அங்கு பார்த்தால் தேவாவும் மீசையை நீக்கி விடுகிறார்.

Also Read: இந்த 6 இயக்குனர்கள் படம்னாலே ‘ஏ’ சர்டிபிகேட் கன்ஃபார்ம்.. கதையை விட அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

உடனே ஜீவாவிற்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விடுகிறது. இருவரும் ஒரே மாதிரி தான் நினைத்திருக்கிறோம் என்று, அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பியாக ஜீவா பேசுவது சிம்ரனை மேலும் குழப்பத்தில் தள்ளியது. இந்த சீனை தான் எஸ்ஜே சூர்யா யோசித்து வைத்திருந்தார்.

ஆனால் வாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அஜித் வேறொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் அஜித், இயக்குனர் எஸ்ஜே சூர்யாவிடம் மீசையை நீக்க முடியாது என ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம். ஆகையால் அந்த சீனை நீக்கிவிட்டனர். இந்த ரகசியத்தை எஸ்ஜே சூர்யா சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also Read: வாலி படத்தில் சிம்ரன் கேரக்டரில் நடிக்க இருந்த நடிகை.. இவங்க தளபதியோட செம ஜோடி ஆச்சே!