அஜீத்துடன் ஏற்பட்ட தகராறு.. ஸ்டண்ட் மாஸ்டர் வீடு புகுந்து அடித்து நொறுக்கிய தல ரத்தங்கள்!

தல அஜித்(ajith) அமைதியான ஆளாக இருந்தாலும் அவரது சுற்று வட்டாரங்கள் கொஞ்சம் மோசமானவர்களாக இருப்பார்கள் போல. அஜித்தை எதிர்த்து பேசினாலே அடிதான் விழும் என்கிற அளவுக்கு வெறியராக இருக்கிறார்களாம்.

அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தல அஜித் படம் தியேட்டருக்கு வருவதால் ரசிகர்கள் அதை கொண்டாடித் தீர்த்து விட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார்கள்.

தல அஜித் எப்போதுமே கொஞ்சம் அமைதியான ஆள் என பலரும் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அஜித்துக்கு அடிக்கடி கோபம் வரும் என்பதை சமீபத்தில் ஓட்டு போட வந்த போதுதான் அனைவரும் தெரிந்து கொண்டனர்.

ஆனால் அதுவே அவருக்கு தவறான ஒரு புரிதலை ஏற்படுத்தி பிரச்சினையை சில வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறை கலைஞர் விழாவில் அஜீத் பேசியது பெரும் சர்ச்சையானது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அப்போது அஜித் தமிழைப் பற்றி தவறாக பேசிய விட்டதாக சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பிரச்சனை முடிந்து வீட்டிற்குச் சென்றது அஜித்தின் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் அவரது வீட்டிற்குச் சென்று அவருடைய காரை எல்லாம் அழித்து உடைத்து விட்டார்களாம். அதன் பிறகு அஜித் மற்றும் ஜாக்குவார் தங்கம் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு காலத்தில் நடந்தது என்றும் ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தல அஜித்துக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் இவ்வளவு வெறியர்கள் இருப்பார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டிருப்பார் ஜாக்குவார் தங்கம்.

stunt-director-jaquar-thangam
stunt-director-jaquar-thangam
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்