ஆசையாசையாய் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம்.. மண்ணை அள்ளிப்போட்ட கார்த்திக் சுப்புராஜ்

காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிவிட்டார். அதற்குக் காரணம் கதையின் நாயகியாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்ததுதான்.

அவரது நேரமோ என்னமோ அவர் நடித்த சோலோ ஹீரோயின் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கமர்ஷியல் சினிமாவில் கவனம் செலுத்தாததே இவருடைய வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

அந்த வகையில் விறுவிறுவென தன்னுடைய 25வது படத்தை நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்திற்கு பூமிகா என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.

25வது படம் வந்து விட்டோம் என ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாடலாம் என காத்துக் கொண்டிருந்தாராம்.

ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது அந்தப் படம் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது. தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் நேரடியாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஒரு படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதால் இந்த படமாவது தியேட்டருக்கு வரும் என ஆசையாசையாய் இருந்தாராம். ஆனால் அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டாராம் கார்த்திக் சுப்புராஜ்.

boomika-cinemapettai
boomika-cinemapettai
- Advertisement -