சிகரெட்டை ஊதித் தள்ளும் ஜகமே தந்திரம் பட ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

ஜகமே தந்திரம் படத்தில் உள்ள ஒரே ஒரு பாசிட்டிவ் என்னவென்றால் படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தான். மலையாள நடிகையான இவருக்கு இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் செம நடிகையான இவர் தமிழில் நினைத்த அளவுக்கு வருவாரா என்பது சந்தேகம்தான். அதற்கு காரணம் ஜகமே தந்திரம் படத்தின் தோல்வி தான்.

ஒருவேளை ஜகமே தந்திரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தால் இன்று தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்திருக்கும். ஜகமே தந்திரம் படத்திற்கு முன்னர் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ஆக்சன் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

விஷால் மற்றும் சுந்தர் சி ஆகியோர் அவர்களது கேரியரில் இவ்வளவு பெரிய தோல்வி படத்தை அதற்கு முன்பு பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டாத திரைப்படம் ஆக்சன்.

இருந்தாலும் மனம் தளராமல் வித்தியாச வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் புகைபிடிக்கும் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

aiswarya-lekshmi-smoking-photoshoot-cinemapettai
aiswarya-lekshmi-smoking-photoshoot-cinemapettai

இதைப்பார்த்த ரசிகர்கள் சினிமாவில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்த நம்ம ஐஸ்வர்யாவா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்