ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

லைக்கா தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரகுமான் இசையில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இப்படத்தில் நடிக்கின்றனர். லால் சலாம் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் பூஜையில் ரஜினி உட்பட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவும் இருக்கிறார்.

Also Read: அதர்வாவை அடித்து துரத்திய ஐஸ்வர்யா.. 2 கிரிக்கெட் வீரர்களுடன் களம் இறங்கும் சூப்பர் ஸ்டார்

இதனாலேயே இந்த திரைப்படம் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷும் தற்போது இயக்குனராக களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே இவர் பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இப்படத்தில் தனுசுடன் இணைந்து விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டாரை காரணம் காட்டி ஐஸ்வர்யா கொடுக்கும் பிரஷர்.. கட் அண்ட் ரைட்டாக பேசும் லைக்கா

தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் அதே நேரத்தில் தனுஷ் படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் மறைமுகமாக ஒரு பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தது பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

அந்த வகையில் மனைவிக்கு போட்டியாக அதே ஹீரோவை தேர்ந்தெடுத்திருப்பதும் திரையுலகில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்த இவர்களுடைய நீயா நானா போட்டி தற்போது வெளிப்படையாகவே ஆரம்பித்திருக்கிறது. அவர்களுடைய இந்த போட்டியில் விஷ்ணு விஷாலுக்கு ஒரு வகையில் லாபம் தான் கிடைத்துள்ளது.

Also Read: தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?