ரிஸ்க் எடுத்து நடிச்ச ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொத்த பிளானையும் சொதப்பிவிட்ட பிரதீப்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த திரைப்படத்திலும் ஒரு வெயிட்டான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் படத்தின் பல காட்சிகளிலும் அவர் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் நவம்பர் 11 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

Also read: கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா

இதற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் தான். பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து இருக்கும் இந்த திரைப்படம் தற்போது பலரின் பாராட்டுகளையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

சத்யராஜ், இவானா, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே பல கோடி லாபம் பார்த்துள்ளது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் போகப் போக படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்படத்திற்கான தியேட்டர்களும் அதிகரித்துள்ளது.

Also read: ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படம்

தற்போது அனைத்து தியேட்டர்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பல திரைப்படங்களும் தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த வாரம் வெளியாக வேண்டிய பல திரைப்படங்கள் வெளிவராமல் தள்ளிப் போயிருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படமும் ஒன்று.

இந்தத் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பிரச்சனையால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இந்த படத்தின் மூலம் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என்று அவர் கட்டிய கனவு கோட்டை அனைத்தும் பிரதீப் ரங்கநாதனல் தகர்ந்து போய் இருக்கிறது. மேலும் இந்த படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வந்த தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரியும் படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று பட குழு தெரிவித்துள்ளது.

Also read: திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

- Advertisement -