மீண்டும் மீண்டும் மரண அடி வாங்கிய விஜய் சேதுபதி.. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அசிங்கப்பட்ட கொடுமை

நேரம் காலம் பார்க்காமல் பிசியாக நடித்து வரும் நடிகர் யாரென்று கேட்டால் யோசிக்கவே வேண்டாம் விஜய் சேதுபதி என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு நிக்க கூட நேரம் இல்லாமல் இவர் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்தது.

அதே போன்று இந்த வருடமும் அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது. அதில் பாலிவுட் படங்களும் அடங்கும். இந்த சூழலில் மாதத்திற்கு ஒரு முறை வெளிவரும் இவரின் படங்கள் வசூலில் தேறியதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சில படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூலில் தோற்றுப் போய் விடுகிறது.

Also read: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

அப்படித்தான் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. பல தியேட்டர்களில் இப்படத்தை பார்க்க ஆளே கிடையாது. அதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கூட இவர் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. அதன் காரணமாகவே படத்தின் மொத்த வசூல் 10 லட்சத்தை தாண்டவில்லையாம்.

அதே சமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த ஃபர்கானா திரைப்படம் இப்படத்தை ஓவர் டேக் செய்து கலெக்சன் பார்த்துள்ளது. கடந்த 12 ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியது. படம் எதார்த்தமாக இருந்தாலும் கூட மக்களின் வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் இப்படம் 55 லட்சம் வரை வசூலித்து இருக்கிறது.

Also read: காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த வகையில் விஜய் சேதுபதியை சைலன்ட்டாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் டேக் செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவருடைய கதை தேர்வு தான். அண்மை காலமாகவே இவர் தனக்கு நெருக்கமானவர்களை தூக்கி விடுகிறேன் என்ற பெயரில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகிவிடுகிறார்.

அதில் ஹீரோ கதாபாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திரம், கெஸ்ட் ரோல் போன்ற கேரக்டர்களும் இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்கள் விஜய் சேதுபதி நிறைய படங்களில் நடித்தும் தோல்விகளை சந்தித்து வருகிறார். இனிமேலாவது இதை புரிந்து கொண்டு சரியான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்போது எழுந்துள்ளது. அதை அவர் தன் ரசிகர்களுக்காக பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Also read: காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்