சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கம்மி பண்ணலைன்னா ரொம்ப டேஞ்சர்

தமிழில் குடும்ப பாங்கான முகம், நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் வாங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே இருந்தது.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் இவரை வேறு ஒரு லெவலில் மக்களுக்கு காட்டியது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என்று பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

என்னதான் நல்ல நடிகை, பந்தா காட்ட மாட்டார் என்று பெயர் வாங்கியிருந்தாலும் சமீபகாலமாக அடிக்கடி இவரின் பெயர் சர்ச்சைகளில் அடிபடுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தன்னிடம் கதை சொல்ல வந்த பிரபல இயக்குனரின் கதையை மொக்கை கதை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அப்பொழுது படப்பிடிப்பின் போது தன் உதவியாளரிடம் சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனால் அவரின் உதவியாளர் உடனே கேரவன் சென்று எடுத்து வந்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் சிறிது தாமதமாக கொண்டு வந்ததற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் கோபப்பட்டு உள்ளார்.

கோபப்பட்டதோடு விடாமல் அந்த உதவியாளரை பளார் என்று கன்னத்தில் அறைந்து இருக்கிறார். இதனால் அந்த உதவியாளர் செய்வதறியாது திகைத்து போயுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிது, சிறிதாக முன்னேறி தற்போது முன்னணியில் இருக்கும் நடிகை இவ்வாறு செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருவது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

aishwarya rajesh
aishwarya rajesh
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்