ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அந்த மாதிரி மட்டமா நடிக்காதீங்க! ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன பதில்

தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் தயக்கம் காட்டும் கதாபாத்திரங்களில் அசால்ட்டாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மற்ற நடிகைகளாக இருந்தால் கண்டிப்பாக இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார்கள். ஆனால் ஐஸ்வர்யா அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் பெரும்பாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

மேலும் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தனது ரசிகர்களுடன் உரையாடினார். அந்தவகையில் ரசிகர்கள் கேள்விக்கு நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்து வந்தார்.

அதில் கதாநாயகிக்கு நிறம் தேவையில்லை என்பதை நீங்கள் நிரூபித்து உள்ளார்கள் என ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். அதில் ஒரு ரசிகர் நீங்கள் ரொம்ப கிளாமரா நடிக்காதீர்கள். உங்களுக்கு அது சுத்தமா செட்டாகவில்லை.

தயவுசெய்து அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் தவிர்த்துவிடுங்கள் என்று கேட்டிருந்தார். அதுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இம் சரி என பதிலளித்திருந்தார். ரசிகரின் வேண்டுகோளுக்கு உடனே செவிசாய்த்து உள்ளார் ஐஸ்வர்யா. தற்போது டி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

Aishwarya Rajesh

மலையாள மொழியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனால் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இது தவிர டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, புளிமடா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் வைத்துள்ளார்.

- Advertisement -

Trending News