ஹீரோயின் மாதிரி ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராயின் மகள்.. பாலிவுட்டுக்கு கிடைத்த உலக அழகி பொண்ணு

Aishwarya Rai’s Daughter: 30 வருடங்களுக்கு முன் கொள்ளை அழகுடன் சரித்திரம் படைக்கும் அளவிற்கு ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக ஜொலித்தார். அதன் பின் உச்சத்திற்கு சென்ற நிலையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து விட்டார்.

அத்துடன் இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்ததும் என்னுடைய மகள் தான் உயிர், உலகம் என்று இவருடைய கேரியரே தியாகம் செய்துவிட்டார். ஆனால் அப்படிப்பட்டவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் மறுபடியும் பேரழகியாக அனைவருக்கும் காட்சி கொடுத்தார்.

இந்நிலையை தற்போது இவருடைய மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இவருடைய மகள் ஆராத்யாவை பார்க்கும் பொழுது அப்படியே அம்மாவைப் போல் அச்ச அசல் பேரழகியாக இருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோயின் மாதிரி ஜொலிக்கிறார். அந்த வகையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மூலம் மறுபடியும் பாலிவுட்டுக்கு ஒரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று சொல்லலாம்.

Also read: அப்பா வயசுனு ரஜினியோடு 4 படங்களில் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. மாமனார் வரை சென்ற பஞ்சாயத்து

அதாவது மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் இவர்களுக்கும் ப்ரீ வெட்டிங் சூட் நிகழ்ச்சி நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவும் போய் இருக்கிறார்கள்.

aiswarya rai
aiswarya rai
aiswarya rai daughter
aiswarya rai daughter

அங்கே நிகழ்ச்சி ரொம்பவே கோலாகலமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யாராய் கொள்ள அழகுடன் வெள்ளை கலரில் சுடிதார் போட்டு கழுத்து நிறைய நகை அணிந்து கொண்டு வழக்கம்போல் ஹேர் ஸ்டைலை முன்னாடி கொண்டு வந்து புன்னகையுடன் இருக்கிறார். அதேபோல இவருடைய மகளும் வெள்ளை கலர் சுடிதார் போட்டு அம்மாவைப் போல முடியை முன்னாடி விட்டு முழுமையான முகத்தை முதன்முறையாக இணையத்தில் வெளிகாட்டி அனைவரையும் கிரங்கடிக்க வைத்து விட்டார்.

தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஆராத்யா நன்றாக வளர்ந்து ஹீரோயின் போல மாறிவிட்டாரே என அவரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கு ஏற்ப அழகில் அம்மாவையே மிஞ்சி ஜொலிக்கிறார்.

Also read: ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் வளர காரணமான பிரபலம்.. மணிரத்தினத்தால் முடியாததை செய்து காட்டிய இயக்குனர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை