சொல்லவே இல்லை.. ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவும், தாத்தாவும் பிரபல நடிகர்களா!

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வித்தியாசத்தை காட்டும். அதனாலேயே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

குடும்ப பாங்கான தோற்றத்தில், நம் வீட்டு பெண் போல் இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஹீரோயினாக உயர்ந்திருக்கும் இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒருவர் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார். அதாவது இவருடைய தாத்தா அமர்நாத் பல தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளாராம்.

இது தவிர அவருடைய அப்பா ராஜேஷ் பிரபல நடிகர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வில்லன் போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருடைய அத்தை ஸ்ரீ லட்சுமியும் தெலுங்கில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். நடன கலைஞராக இருந்த இவருடைய அம்மாவின் ஆசைப்படி டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு சினிமா துறைக்குள் காலடி வைத்தார்.

Ishwariya-rajesh-father
Ishwariya-rajesh-father

மேலும் அவருடைய அப்பா அவருக்கு எட்டு வயது இருக்கும் போதே இறந்து விட்டார். அதன் பிறகு சில வருடங்களிலேயே ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு அண்ணன்களும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர். தற்போது தன் அம்மா மற்றும் அண்ணன் மணிகண்டன் உடன் இவர் வசித்து வருகிறார். அவரின் அண்ணன் சில சீரியல்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்