வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. விவாகரத்து எல்லாம் நாடகமா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி என வைத்திருந்தார். இதனால் இவர்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது.

மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இரு குடும்பமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இருவருமே தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்தனர். ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் தனுஷ் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இரண்டாவது மகன் லிங்காவின் 12 ஆவது பிறந்த நாள் வந்தது. அப்போது இருவருமே தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் தனது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும் சமீபத்திய பார்ட்டி ஒன்று ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே பங்குபெற்றனர்.

ஆனால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமலே அந்த நிகழ்ச்சியில் இருந்து சென்றுவிட்டனராம். ஆனால் தற்போது இவர்களைப் பற்றிய ஒரு விஷயம் கசிந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒன்றாக இருந்த போதும் ஆரியபுரத்தில் உள்ள ஒரு பிளாட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பிரிந்த பிறகும் தற்போதும் அந்த வீட்டின் பெயர் பலகையில் தனுஷ், ஐஸ்வர்யா பெயர் நீக்கப்படவில்லை. மேலும் அடிக்கடி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அங்கு சென்று வருகிறார்களாம். தங்களுடைய வாழ்க்கை நினைவலைகளை மறக்கமுடியாமல் அந்த வீட்டுக்கு சென்று வருகிறார்கள்.

இதனால் இவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவ்வாறு இருவரும் ஒன்றாக விவாகரத்து செய்தியை அறிவித்துவிட்டு தற்போது மீண்டும் இணைகிறார்கள் என்றால் நாங்கள் முட்டாளா என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News