அதிமுக 125 தொகுதிகளுடன் ஜெயிப்பது உறுதி.. அதிரடியாக வெளியான சர்வே ரிப்போர்ட்!

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்பது பற்றி  ஜியோன் ஆய்வு அமைப்பு என்ற தனியார் ஆய்வு நிறுவனம் சர்வே நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஹாட்ரிக் சாதனை புரியும் என்று சர்வே முடிவுகள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், இதற்கான முழு காரணம் தமிழக அரசின் நிர்வாக திறனுக்காக கிடைத்த விருதுகளும், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கியதும் தான் என்று சொல்லப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமி அவர்களின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே நடத்தப்பட்டதாகவும், இதில் அதிமுக 45 % வாக்குகளைப் பெற்று 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும், 44 % வாக்குகளுடன் 109 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று  எதிர்க்கட்சி பதவியை பெறும் என்றும் சர்வே முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதேசமயம், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள இந்த சர்வேயில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய அபிப்ராயம் தமிழக மக்களிடத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், முதல்வர் பயன்படுத்தும் ‘நான் ஒரு விவசாயி’ என்ற வார்த்தை மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றும், சாமானியர்கள் அனைவரிடமும் முதல்வர் எளிதாக பழகி வருவது முதல்வருக்கு தனி ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்திருப்பதாகவும் மக்கள் இந்த சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க நாடாளுமன்ற தேர்தலில் இருந்த மக்களின் மனநிலை, தற்போது தலைகீழாக மாறி, அதிமுகவின் செல்வாக்கு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா, நிவர் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டது, கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட எதிர்கொண்டது, பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கியது போன்ற பல திட்டங்களைத் தீட்டி, முதல்வர் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிந்து உள்ளதாகவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

edappadi-3

மேலும் மண்டல வாரியாக கட்சியின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் அதிமுகவும், சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மன்றங்களில் திமுகவும் முன்னிலை பெற்றுள்ளன என்று  சர்வே முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முதலமைச்சராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 42 சதவிகிதம் பேர் ஸ்டாலினையும், நாற்பத்தி ஒரு ஸ்பேர் 41 சதவிகிதம் பேர் எடப்பாடியாரையும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, பின்புலத்துடன் கால் பதித்த ஸ்டாலினுக்கு எவ்வளவு மதிப்பு தமிழகத்தில் உள்ளதோ, அதே மதிப்பு தற்போது தொண்டனாக இருந்து முதல்வராக  உயர்ந்துள்ள எடப்பாடிபழனிசாமிக்கும் கிடைத்திருப்பது, மக்கள் எடப்பாடி யாரை தங்களில் ஒருவராக பார்ப்பதால்தான் என்று இந்த சர்வே முடிவுகள் மூலம் தெளிவாகத் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்