இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த அதிமுக தேர்தல் அறிக்கை! அடுக்கடுக்கான வாக்குறுதிகளால் குஷியான யூத்ஸ்!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை கண்ட பெண்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் தற்போது தமிழக இளைஞர்களும் இணைந்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது போட்டித் தேர்வுகளை எழுதும் இளைஞர்கள் தங்களது கனவு நிஜமாக இந்த அறிவிப்பு பெரிதும் உதவும் என்று தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளம்பெற செய்வதற்காக பல திட்டங்களை அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 18 வயதுடையவர்களுக்கு கட்டணமில்லா வாகன பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் உரிமம் வழங்குதல், தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதி போன்ற அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது ஒருபுறமிருக்க வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை  இரண்டு மடங்காக அதிகரித்து வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான அறிவிப்புகள் இதோ:

  1. மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  2. கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  3. அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.
  4. இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இவ்வாறு பல திட்டங்களை வகுத்து மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினர் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது அதிமுக. இதனை அறிந்த மாணவர்களும் இளைஞர்களும் தங்களது நன்றியை அதிமுக அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -