பிரதீப்பை வெளியேற்றியது ஏஜென்ட் டீம் செய்த சதி.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை

Bigg Boss Tamil Season 7 | 6th November 2023 – Promo 1: விஜய் டிவியில் காரசாரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்களை அதிரடியாக வெளியேற்றுகின்றனர். கடந்த வாரம் யுகேந்திரன், வினுஷா வெளியேறிய நிலையில் இந்த வாரம் பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து தூக்கி விட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று அன்னபாரதி எலிமினேட் செய்யப்பட்டார். அதிலும் பிரதீப்பை வெளியே அனுப்பியது ஒரு டீம் ஆக்டிவிட்டி தான் என்பதை விசித்ரா பகிரங்கமாக போட்டு உடைத்தார். இவருடைய இந்த கருத்திற்கு அர்ச்சனாவும் ஆதரவாக குரல் கொடுக்கிறார்.

இந்த சீசனின் ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட் ஆன பிரதீப்பை வெளியே அனுப்பினால் தான் நாம் ஜெயிக்க முடியும் என்பதை மாயா, பூர்ணிமா ஏஜென்ட் குரூப் கேவலமாக ஒரு சதி செயலை செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உரிமைக்குரலை உயர்த்தி பிரதீப் கெட்ட வார்த்தை பேசுவதாகவும், அவரால் பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் சொல்லி அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி விட்டனர்.

Also Read: பிரதீப்புக்கு ரெட் கார்டு காட்டிய போட்டியாளர்கள் யார் தெரியுமா?. குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா போச்சு

இந்த ஏஜென்ட் குரூப்பிற்கு ஆண்டவரும் துணை போனது தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது விசித்ரா இந்த விஷயத்தை நாமினேஷன் பிராசஸில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது தெரிந்த மாயா விசித்ராவை, ‘இது கேவலமான செயல்’ என்று கத்துகிறார். இந்த வார கேப்டனாக இருக்கும் மாயாவை அர்ச்சனா வெளுத்து வாங்கி விட்டார்.

‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் பவரை மனசாட்சிக்கு விரோதமாக பயன்படுத்தி இருந்தால் பிரதீப்பின் வாழ்க்கையை கெடுத்த பாவமும் உங்களை வந்து சேரும்’ என்று மாயாவின் மூஞ்சிக்கு நேராகவே பேசி அழுமூஞ்சி அர்ச்சனா தன்னுடைய ஆட்டத்தை இன்று பிக் பாஸ் வீட்டில் துவங்கி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என பிரிந்திருக்கும் இந்த வீடு இனிமேல் இரண்டு குழுக்களாக பிரிந்து கடும் மோதலில் ஈடுபடுகின்றனர்.

இப்படி எல்லாம் நடந்தால் டிஆர்பி எகிறும் என்பதை மனதில் வைத்து தான், பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து அதிரடியாக எலிமினேட் செய்ய வேண்டும் என ஆண்டவர் சொல்வதற்கு விஜய் டிவியும் ஒத்துக்கொண்டு மட்டமான வேலையை செய்திருக்கிறது. பிரதீப் இந்த சீசனில் இல்லாமல் இருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: 34 நாட்களில் பிரதீப் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரெட் கார்டு கொடுத்தும் லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

இன்று வெளியான பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இதோ!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்