15 முதல் 60 வயது வரை தேவதாசியாக நடிக்கும் சாய் பல்லவி.. இணையத்தில் ட்ரெண்டான நியூ லுக்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் அறிமுகமான முதல் படமே அதிரி புதிரி வெற்றி பெற்றதால் அம்மணி அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமானார். தொடர்ந்து அடித்த ஹிட் காரணமாக சாய் பல்லவிக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது.

அதன் காரணமாக தற்போது அம்மணி தான் தெலுங்கில் டாப் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் அடித்த சூப்பர் ஹிட் காரணமாக சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்த சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்க, விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த ஜென்ம ஞாபகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடிக்க அருக்கு ஜோடியாக கீரித்தி ஷெட்டி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகிய நாயகிகள் நடித்துள்ளனர். இதில் சாய்பல்லவி தேவதாசியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு தவிர தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இளவயது தேவதாசியாகவும், முதிய பெண்மணியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது முதுமையான சாய்பல்லவிக்கு மேக்கப்போடும் மேக்கிங் BTS வீடியோவும், புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sai-pallavi
sai-pallavi

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயதான தோற்றத்தில் கூட சாய் பல்லவி அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சாய் பல்லவிக்கு எந்த அளவிற்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்