ஒரே ஒரு படம் எடுத்து அதையும் வெற்றிகரமாக கொடுத்த இளம் இயக்குனர் ஒருவரை ரஜினி பாராட்டியதால் தற்போது கோலிவுட் சினிமாவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் அவர் வீட்டுக்கதவு முன்புதான் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த சில வருடங்களாகவே ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஓய்வில்லாமல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வீதம் வேக வேகமாக சென்று கொண்டிருக்கிறார். அதனால் அவரது சம்பளமும் ரூ 100 கோடியை தாண்டிவிட்டது. கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் சொதப்பியதால் அடுத்ததாக வெளியாகும் அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து சென்னைக்கு அனுப்பி விட்டார் சிறுத்தை சிவா. தற்போது வீட்டில் சும்மா இருக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக இளம் இயக்குனர்களுடன் படம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
முதலில் கார்த்திக் சுப்புராஜ் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றிப்படம் கொடுத்த தேசிங்கு பெரியசாமி ரஜினியின் ஹிட் லிஸ்டில் இருக்கிறாராம். இவரின் முதல் படம் வெளியான போதே ரஜினிகாந்த் எனக்காக ஒரு கதை செய்யும்படி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.
தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்து விட்டதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமியிடம் பெரிய சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இது தவிர மேலும் சில தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்களும் இவருடைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினியின் ஒற்றை போன் காலில் இவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.