ரஜினி வீட்டை தொடர்ந்து மற்றொரு ஹீரோ வீட்டிலும் நகை கொள்ளை.. தங்கம் வைரம் என மொத்தமும் அபேஸ்

சில மர்மமான திருட்டு சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், திரைபிரபலங்கள் வீட்டிலும் திருட்டு சம்பவங்கள் அதிகப்படியாக நடைபெற்று வருகிறது . அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 60 சவரன் நகை காணாமல் போன நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பின் அவரது வீட்டில் வேலை செய்த பெண் பணியாளர் மற்றும் கார் ட்ரைவரை விசாரணை செய்த போலீசார், 100 சவரன் நகைகளை பெண் பணியாளர் திருடியது உறுதியானது . மேலும் அந்த பெண் பணியாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என தைரியமாக போலீசாரிடம் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். கூடுதலான 40 சவரன் நகை குறித்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை செய்து வந்தனர்.

Also Read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

பல வருடங்கள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்து கூடவே இருந்த பணியாளர் துரோகம் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதே போன்ற சம்பவம் பிரபல வாரிசு பாடகரின் வீட்டில் அரங்கேறியுள்ளது. 80 களில் தமிழ், மலையாளம் உள்ளட்ட பல மொழிகளில் தனது இனிமையான குரல் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் தான் பாடகர் யேசுதாஸ்.

இவரது மகனான விஜய் யேசுதாசும் சினிமாவில் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக வளம் வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், தனுஷின் மாரி திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பார். தொடர்ந்து படைவீரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது கொளம்பி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கூட இருந்தவங்களே குழி பறிச்சா எப்படி?

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் இவரது வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. கிட்டத்தட்ட 100 சவரன் மதிப்புமிக்க தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்ததாகவும், திடீரென காணாமல் போனதாகவும் காவல்துறையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்து வருகின்றனர்.

இப்படி திரைபிரபலங்கள் வீட்டில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மற்ற பிரபலங்கள் சற்று பீதியில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கணக்கில் வராத நகைகள், சொத்து விவரங்களும் தற்போது இந்த திருட்டு சம்பவங்கள் மூலமாக வெளியில் தெரிய வருகிறது. இந்நிலையில் விஜய் யேசுதாஸின் வீட்டில் யார் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதை கூடிய விரைவில் கண்டுப்பிடிக்குமாறு போலிஸாருக்கு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read:ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்