புலி தோல்விக்குப் பிறகு வெற்றி பெற 6 வருடம் எடுத்துக் கொண்ட சிம்புதேவன்.. சூப்பர் பாஸ்!

விஜய்யின் சினிமா கேரியரில் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்து அதற்கு முன்னர் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு ஏகபோக வரவேற்புகளையும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படம் புலி.

2015ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய வழக்கமான மாஸ் கமர்ஷியல் பாணியை முற்றிலும் மாற்றி ஃபேண்டசி படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், காமெடி நடிகர்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர்.

ஆனால் படம் வெளியான பின்னர் இது குழந்தைகளுக்கான படம் என முத்திரை குத்தப்பட்டது. அதன் காரணமாகவே படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. புலி படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற நல்ல நல்ல படங்களை எடுத்த சிம்புதேவன் எடுத்திருந்தார்.

புலி படத்தின் தோல்வி அவரை மிகவும் பாதித்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு ஆறு வருட காலமாக சிம்புதேவன் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. மேலும் அவர் படம் இயக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியையே தழுவியது.

இவ்வளவு ஏன் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படம் கூட ஆரம்பித்த சில நாட்களில் கைவிடப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதன் பிறகு சிம்புதேவன் எடுத்த கசடதபற என்ற படமும் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி ரொம்பத் தடுமாறியது.

இந்நிலையில் ஒருவழியாக கசடதபற படம் வெளியாகி சிம்புதேவனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்து வருகிறது. படம் பார்த்த அனைவருமே படம் சூப்பராக இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றிக்காகத்தான் ஆறு வருடங்கள் போராடினேன் என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி மெய் சிலிர்க்கிறாராம் சிம்புதேவன்.

kasadatabara-cinemapettai
kasadatabara-cinemapettai