அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

கோலிவுட்டில் ஒரு சில படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற அட்லி, பாலிவுட் பக்கம் தனது அடையாளத்தை நிரூபிக்க திசையை திருப்பி உள்ளார். இவர் தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த பதான் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியால் பாலிவுட் சினிமாவே கௌரவம் அடைந்துள்ளது. பாலிவுட்டில் கொஞ்ச காலமாக நல்ல படங்கள் வருவதில்லை.

Also Read: 20 கோடி வாங்கிட்டு டகால்டி கொடுத்த நயன்தாரா.. அடி மேல அடி மேல அடி வாங்கும் ஜோடிகள்

ஷாருக்கானின் பதான் படம் தான் அந்தப் பெயரை எல்லாம் போக்கியது. இந்நிலையில் கடந்த மூன்று நான்கு வருடங்களாக ஜவான் படத்தை ஜவ்வாக இழுத்து வருகிறார் அட்லி என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.

அட்லி பட்ஜெட்டை வேண்டுமானால் அதிகப்படுத்துவாரே தவிர படத்தை சொன்ன நேரத்துக்கு முடித்து விடுவார். ஆனால் ஷாருக்கான் 5 வருடங்களுக்குப் பிறகு கதாநாயகனாக மீண்டும் பதான் படத்தில் நடித்திருப்பதால், இந்த படத்தின் ப்ரோமோஷனை முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமாக நடத்தினார்.

Also Read: இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட 5 படங்கள்.. பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்

இதனால் பதான் படத்தின் ப்ரமோஷன் மற்றும் சூட்டிங்க்கு ஷாருக்கான் சென்று விட்டதால் தான் ஜவான் படம் லேட்டாக காரணம். ஆனால் அட்லி மீது மொத்த பழியையும் போடக்கூடாது. இது மற்றவர்கள் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஷாருக்கானுக்கு ஜவான் படம் லேட் ஆகுவதற்கு என்ன காரணம் என்பது கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

ஆனால் அவரே தற்போது ஜவான் படத்தை சீக்கிரம் முடித்து தருமாறு அட்லிக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். கோலிவுட் நடிகர்கள் இது போன்ற எந்த டார்ச்சலையும் கொடுக்காத நிலையில், ஷாருக்கானிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

Also Read: நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்