எம்ஜிஆருக்கு அப்புறம் விஜய் தான் சாதிப்பார்.. ஆனாலும் பெரிய முதலைகளிடம் தாக்குப் பிடிப்பது கஷ்டம்

After MGR Only Vijay Will Succeed: சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எம்ஜிஆரை பார்த்து தான் வருகிறது. ஏனென்றால் நடிகராக இருந்த புரட்சித் தலைவர், அரசியலுக்கு வந்த பின் அவருக்கு கிடைத்த பேரும் புகழையும் பற்றி வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. இப்போது எம்ஜிஆருக்கு அப்புறம் விஜய் தான் அரசியலில் சாதிக்கப் போகிறார்.

ஆனால் அரசியலில் இருக்கும் பெரிய முதலைகளிடம் விஜய் தாக்குப்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் என்று அரசியல்வாதியும் நடிகருமான ராதாரவி சமீபத்திய பேட்டியில் ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார். கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராதாரவியும் கலந்து கொண்டாராம்.

அப்போது விஜய் ரசிகர்களை பார்த்து ராதாரவி மிரண்டு போய் விட்டாராம். ஆனால் விஜய் அதையெல்லாம் கண்டுக்காமல் ரொம்பவே எதார்த்தமாக இருந்தார். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர்களை அதிகம் கவர்ந்த அரசியல்வாதிகள் சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் தான். ஆனால் இவர்களைத் தாண்டி விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

Also Read: விஜய் செயலால் மரியாதை இல்லைன்னு எஸ்கேப் ஆன அஜித்.. ரஜினியை ஃபாலோ பண்ணும் ஏகே

முதலைகளிடம் தாக்குப் பிடிப்பாரா விஜய்

இவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனா உதயநிதியிடம் போட்டி போடுவது கொஞ்சம் கஷ்டம். அதை மீறி விஜய் தாக்கு பிடித்து விட்டால் அவர்தான் அடுத்த எம்ஜிஆர் என்று ராதாரவி ரொம்பவே நெகிழ்ச்சியுடன் பேசினார். யார் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தன்னை யார் என நிரூபிக்க தயாராகி விட்டார்.

ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். மேலும் தளபதி 68 முடித்துவிட்டு இரண்டு வருடம் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் தீவிரமாக இறங்கும் எண்ணத்தில் விஜய் இருக்கிறார். அப்போதுதான் உதயநிதி- விஜய் இருவரிடம் ரியல் வார் துவங்கும். ராதாரவி நினைப்பது போல் விஜய், உதயநிதி அன் கோவிடம் தாக்குப் பிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: மதுரை களத்தை மையமாக எடுக்கப்பட்ட 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்