வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

திருமணத்திற்கு பிறகு அதிரடி காட்டும் நயன்தாரா.. பக்காவா போட்ட ஸ்கெட்ச்

நயன்தாரா தன்னுடைய பல வருட காதலர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இந்த திருமணம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

தற்போது இந்த ஜோடி ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சில விஷயங்களில் அதிரடி காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு நயன்தாராவின் பட சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் விக்னேஷ் சிவன் தான் பார்த்துக் கொள்வார்.

நயன்தாராவை யாராவது சந்திக்க வேண்டும் என்றால் அவரிடம் தான் அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போது அப்படி கிடையாது. விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதனால் அவர் அந்த பட வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறார்.

அதன் காரணமாக அவர் தற்போது நயன்தாராவுக்கென தனி மேனேஜரை நியமித்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் கதையைக் கேட்பதற்காகவும் ஒரு குழுவை அவர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இனி நயன்தாராவுக்காக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அவர்களை தான் சந்திக்க வேண்டுமாம்.

மேலும் அவர்கள் தான் நயன்தாராவுக்கான கதையை கேட்டு முடிவு செய்ய இருக்கிறார்கள். அவர்கள் கை காட்டும் கதைகளை தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து ஆலோசித்து முடிவு செய்வார்களாம். இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து அவர் அங்கு இன்னும் சில திரைப்படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அதனால் தான் அவர் தற்போது பல விஷயங்களில் அதிரடி காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News