மேடைப்பேச்சு சர்ச்சை.. இருந்தாலும் தேடிபோய் கலைஞருக்கு அஜித் கொடுத்த அன்பு பரிசு!

தல அஜித் கலைஞர் என்றாலே மேடைப் பேச்சு சர்ச்சை தான் ஞாபகத்திற்கு வரும். ஒரு பொது மேடையில் கலைஞரிடம் தைரியமாக அவர்களது தொண்டர்கள் செய்யும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தல அஜித் ஒரு முறை கலைஞர் மு கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தும்போது மேடையில் பேசினார். அப்போது சிலர் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என டார்ச்சல் செய்வதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

அப்படி செய்து கலைஞர் விழாவுக்குத் தான் வர வைத்தார்கள் என்பது போன்ற செய்திகள் வெளியானது. போதாக்குறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து அஜீத் பேச்சுக்கு கைதட்டியது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் கலைஞர், அஜித் மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் தனியாக தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து சந்தித்த நிகழ்ச்சி எல்லாம் நடந்து முடிந்தது. அதன் பிறகுதான் தல அஜித் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பில்லா படத்தை தயாரித்த ஆனந்தா எல் சுரேஷ் என்பவர் சமீபத்தில் இந்த பிரச்சனை எல்லாம் நடந்து முடிந்த பிறகு தல அஜித்தை அழைத்துக்கொண்டு கலைஞரைப் பார்க்க சென்றாராம். அப்போது தல அஜித் கலைஞர் மு கருணாநிதியை பார்க்க வெறுங்கையுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஒரு விலையுயர்ந்த பேனா ஒன்றை வாங்கிக்கொண்டு போனாராம்.

ajith-kalaigner-cinemapettai
ajith-kalaigner-cinemapettai

அதைப் பார்த்த கருணாநிதி ஒரு நமட்டுச் சிரிப்புடன் அந்த பரிசை ஏற்றுக்கொண்டு அஜீத்தை தட்டிக் கொடுத்ததாக சமீபத்திய வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -