தன் வாயால் கெட்ட அஜித்.. அப்படி என்ன பேசியுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே இவரது எளிமையும், நடிகர் என்று அலட்டிக் கொள்ளாத குணமும் தான். இதற்காகவே அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அஜித் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் தற்போது தான் மிகவும் பக்குவமாக பேசி வருகிறார். ஆனால் ஆரம்பகாலத்தில் நிறைய லூஸ் டாக் விட்டுள்ளார்.

ஒரு சமயத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த அஜித், பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அஜித், “நான் தான் நம்பர் 1. அதுமட்டுமில்லை, அடுத்த 4 இடமும் நான் தான். 6வது இடம் தான் மற்ற நடிகர்கள் எல்லாம்” என மிகவும் திமிராக கூறியுள்ளார்.

இதன் பிறகு அஜித்திற்கு தொடர் தோல்விகள் தானாம். இந்த தோல்விகள் தான் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அஜித் தற்போது நல்ல பக்குவமான நபராக மாறியுள்ளார்.

மேலும் இவரது இந்த நிதானம் மற்றும் பக்குவத்திற்கு அஜித்தின் மனைவி ஷாலினி ஒரு மிக முக்கிய பங்கு ஆவார். இதனை அஜித் திருமணத்திற்கு பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ajith-shalini
ajith-shalini

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பார்ப்பதற்கு எந்த பந்தாவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நம்ம தலயா இப்படி எல்லாம் பேசி உள்ளார் என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -