பிகிலைத் தொடர்ந்து வசூலில் முத்திரை பதித்த வாரிசு.. யாரும் தொட்டுப் பார்க்க முடியாத சாதனையில் விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படம் ஒரு விளையாட்டு அதிரடி திரைப்படம். இந்தப் படத்திற்கு அதிக அளவில் பாராட்டுக்கள் கூடிய விமர்சனங்களும் மற்றும் வணிக ரீதியாகவும்  சாதனையை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது முறையாக விஜய் பெரிய சாதனையை பார்த்து வருகிறார்.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் அளவில் பெரிய சாதனையை எட்டி உள்ளது. இதற்கு ஒரு காரணம் அஜித்தின் துணிவு படம் போட்டியாக வந்தது என்று கூட சொல்லலாம்.

Also read: மீண்டும் இணையும் வாரிசு கூட்டணி.. தில் ராஜுக்காக எதுவும் செய்யத் துணிந்த விஜய்

ஏனென்றால் வாரிசு படத்தை வெளியிடுவதற்கு சில தடைகள் ஏற்பட்டு வந்தது. அதாவது தமிழகத்தில் சில பல அரசியல் சூழ்ச்சியில் துணிவு படத்தை விட வாரிசு படத்திற்கு தியேட்டர்கள் குறைவாக தான் கிடைத்தது. ஆனாலும் அதை எந்தவிதத்திலும் பொருட்படுத்தாமல் இப்பொழுது வாரிசு படம் சாதனையில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழ் படங்களில் இதுவரை நான்கு படங்கள் மட்டுமே 300கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அந்தப் படங்கள் ரஜினியின் 2.0, கமலின் விக்ரம், பொன்னியின் செல்வன் மற்றும் விஜய்யின் பிகில் ஆகும். இந்த வரிசையில் விஜய்யின் வாரிசு படம் இணைந்துள்ளது.

Also read: 26 நாட்களை தாண்டியும் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு, துணிவு.. பின்னுக்கு தள்ளப்பட்ட மூன்று வார புதிய படங்கள்

தற்பொழுது 300 கோடி வசூல் சாதனையில் இது விஜய்க்கு இரண்டாவது படம். இதன் மூலம் விஜய்யை ஒரு சிறந்த ஆட்ட நாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்பொழுது விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து விஜய்யின் வாரிசு மற்றும் லோகேஷின் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை மிஞ்சும் அளவிற்கு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறார்கள். அதே மாதிரி இந்தப் படமும் விஜய் மற்றும் லோகேஷ்க்கு ஒரு வசூல் சாதனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்