
ரஜினி(Rajini) நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்த கட்ட வேலைகளில் இறங்க உள்ளதாம் படக்குழு.
மேலும் ரஜினிக்கு இன்னும் மூன்று நான்கு நாட்கள் மட்டுமே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் இருக்கும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுப்பார் என யோசித்த நேரத்தில் அடுத்தடுத்த படங்கள் செய்வதில் ஆர்வமாக இருக்கிறாராம்.
100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது யார் தான் ஓய்வு பெற நினைப்பார்கள். அந்தவகையில் அடுத்ததாக பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அதற்கு முன்பே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவரிடம் ஒரு வரி கதையை கேட்டுவிட்டு அந்த கதையை டெவலப் செய்ய சொல்லிவிட்டு தான் அண்ணாத்த படத்திற்கே சென்றாராம் தலைவர்.
இந்நிலையில் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படமொன்றில் ரஜினி நடிக்க உள்ளதாகவும், அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிகிறது.
