33 வருட காத்திருப்புக்கு தலைவர் வைத்த முற்றுப்புள்ளி.. தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் ரஜினி செய்த காரியம்

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் இப்போது 25 வயது இளைஞன் போல் படு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய ஜெயிலர் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக லால் சலாம் படமும் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது அவர் தலைவர் 170 படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்தில் இதன் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் போட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதிலும் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு போட்டோ பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பது அனைவருக்கும் தெரியும்.

டி.ஜே ஞானவேல் இயக்கும் இப்படம் ஒரு உண்மை கதையின் தழுவலாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை தான் இப்போது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கின்றனர்.

அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரஜினி என்னுடைய வழிகாட்டியான அமிதாப் உடன் இணைந்துள்ளேன். இந்த தருணம், மகிழ்ச்சியில் என் இதயம் துடிக்கிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த போட்டோவை பார்க்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் இருவரும் தங்களுடைய கதாபாத்திர கெட்டப்பில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அதில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். அதேபோன்று அமிதாப்பச்சன் தலையில் ஒரு துணியை கட்டியபடி, கூலிங் கிளாஸ், கலக்கலான டிரஸ் என அம்சமாக இருக்கிறார். அதிலும் சூப்பர் ஸ்டாரின் தோள் மீது அவர் கைப்போட்டு நட்புடன் சிரித்தபடி இருக்கும் அந்த போட்டோ நிச்சயம் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

அதனாலேயே இப்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஒரு படி அதிகமாகி இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தாலே அந்த படம் தாறுமாறு ஹிட் அடிக்கும். இதில் இரண்டு சிகரங்கள் ஒன்றாக இணைந்திருப்பது ஆயிரம் கோடிக்கான முதல் படி என ரசிகர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் மீண்டும் திரும்பி இருக்கும் இந்த வரலாறு நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமிதாப் பச்சன் – ரஜினி

rajini-amithab batchan
rajini-amithab batchan
Sharing Is Caring:

அதிகம் படித்தவை