பெரிய தலைகள் சேரும்போது நறுக்குன்னு குத்தி விட்ட கமல்.. 25 வருடத்திற்கு பிறகு உலக நாயகனுக்கு அடித்த லக்

உலக நாயகன் கமலஹாசன் நடித்து, தயாரித்த விக்ரம் படம் 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளினார். அதன் பிறகு இப்போது கமலின் இந்தியன் 2 படம் இப்பொழுது ஜோராக வேலை நடந்து கொண்டிருக்கிறது. மாஸ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இப்பொழுது கூடுதல் பலம் சேர்ப்பதற்காக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் எல்லாமே பெரிய கைகள். உலக நாயகன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க பிரம்மாண்டத்திற்கு பெயர் சங்கர் இயக்குகிறார். இவ்வாறு ஒரு மாஸ் கூட்டணி வேலை செய்து கொண்டே இருக்கிறது.

Also Read: புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

இப்பொழுது படத்தில் பிரம்மாண்டதிற்காக ஒரு பாட்டு வைக்கப் போகிறார்களாம். அதற்காக தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறது படக்குழு. ஏற்கனவே கமலின் அவ்வை சண்முகி படத்தில் ‘காதலா காதலா’ பாடல் எடுத்த இடத்தில் இப்பொழுது 25 வருடம் கழித்து இந்தியன் 2 படத்திற்காக இன்னொரு பாடல் எடுக்கப் போகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் உடன் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் கமலஹாசன் வயதான பெண்கதாபாத்திரம் உள்ளிட்ட 2 வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார்.

Also Read: விவேக் மறைவால் இந்தியன் 2 படத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.. கனவு கனவாகவே போயிருச்சு!

மேலும் அவ்வை சண்முகி படத்தில் அந்தப் பாட்டு ப்ளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. கமல் தான் இந்த ஐடியாவை கொடுத்ததாக தெரிகிறது. இந்த ஐடியா சங்கருக்கும் பிடித்த போனதால் கமலஹாசன் சொன்னபடியே படக்குழுவை கூட்டிக்கொண்டு தென் ஆப்பிரிக்கா கிளம்ப முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது.

இந்தியன் 2 படத்தின் பெரும்பான காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது கமல் கொடுத்திருக்கும் ட்ரிக்கை படத்தில் செயல்படுத்தி படத்தில் சூப்பர் ஹிட் ஆகப்போகும் பாடலை எடுக்க கிளம்புகின்றனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்களுக்கும் இந்தியன் 2 படத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்