14 வருடம் கழித்து தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய விஜய்.. கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு அள்ளிக் கொடுத்த தளபதி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா சில வருடங்கள் நடித்தாலும் வாய்ப்புகள் சற்று குறைவாக காணப்பட்டு வந்த காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்தார். பின்னர் திரிஷாவிற்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பை கண்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

முக்கியமாக விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் திரைப்படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்க உள்ள நடிகர் விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியாகி வைரலானது.

Also Read : நயன்தாராவுக்கு போட்டி த்ரிஷா, சமந்தா இல்லயாம்.. 15 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை, அடேங்கப்பா!

இத்திரைப்படத்திற்கு முன்பாக நடிகை திரிஷா மற்றும் விஜய்யின் காம்போவில் ஆதி, திருப்பாச்சி, குருவி, கில்லி உள்ளிட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டானது. இந்த நிலையில் விஜய், திரிஷா ஜோடி மீண்டும் 14 வருடங்கள் கழித்து சேரவுள்ளது ரசிகர்களுக்கு குஷியை ஏற்ப்படுத்தியது. இதனிடையே தளபதி 67 படத்தில் திரிஷாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பாணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள நிலையில், எஸ்.எஸ். லலித் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளார். நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம்-1, பாகம்-2 என இரண்டையும் சேர்த்து இரண்டு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தளபதி 67 தயாரிப்பாளரிடம் 3 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளார்.

Also Read : நம்பர் ஒன் இடத்திற்கு அடி போடும் த்ரிஷா.. பஞ்சையும் நெருப்பையும் பற்ற வைக்கும் கௌதம் மேனன்

இதனை அறிந்த நடிகர் விஜய், திரிஷாவிற்கு ஒரு கோடி ரூபாய் அதிகமாக போட்டு 4 கோடி வரை சம்பளத்தைப் கொடுக்குமாறு தயாரிப்பாளரிடம் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான காரணம் நடிகர் விஜய் மற்றும் திரிஷாவின் காம்போவில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றியாக அமைந்ததால், கட்டாயம் இந்த ரீ என்ட்ரி காம்போவும் வெற்றியாக வேண்டும் என விஜய் கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு வாரிக்கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நடிகை த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட எந்த ஒரு முன்னணி நடிகைகளின் போட்டிகளும் இல்லாமல் தனி காட்டு ராணியாக களமிறங்கியுள்ளார். இதில் விஜய்யின் ஆதரவும் இடம் பெற்றுள்ளதால் திரிஷாவின் ரீ என்ட்ரி பிரகாசமாக அமைந்துள்ளது.

Also Read : த்ரிஷா வாழ்க்கையில் கதகளி ஆடிய 5 பிரபலங்கள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் அம்மணி!