ரெண்டே படத்திலேயே சம்பளத்தை அதிகரித்த அதிதி.. கைவசம் இருக்கும் 4 படங்கள், ஆன வெளிவருமா?

Aditi Sankar: அப்பாவுக்கு இருக்கும் பெயரும் புகழையும் வைத்துக்கொண்டு சினிமாவிற்குள் வாரிசு நடிகையாக அதிதி சங்கர் நுழைந்திருக்கிறார். ஆனாலும் திறமை இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பதால் அதிக உத்வேகத்துடன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சினிமாவிற்குள் நுழைந்த இரண்டு வருடத்தில் இரண்டு படங்களை வெற்றியாக கொடுத்திருக்கிறார். கடந்தாண்டு வெளிவந்த மாவீரன் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு எந்த படங்களும் வரவில்லை. ஆனால் கைவசம் ஏகப்பட்ட வாய்ப்புகளை குவித்துக்கொண்டு வைத்திருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி நடிக்கப் போகும் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் கமிட்டாகி இருக்கிறார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை எடுத்தார். ஆனால் இந்த படம் பெய்லியர் படமாக ஆனதால் பாலிவுட் பக்கம் போய்விட்டார்.

மறுபடியும் இங்கே வரும் பட்சத்தில் ஆர்யாவின் தம்பியை வைத்து இயக்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து அதிதி சங்கர் அதர்வா-க்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார். இவர்கள் இருவரையும் வைத்து இயக்குனர் எம் ராஜேஷ் படத்தை இயக்கப் போகிறார்.

இழுவையில் இழுத்து அடிக்கும் சூர்யாவின் 43 வது படம்

இவர் எடுக்கக்கூடிய முக்கால்வாசி படம் காதல் சம்பந்த படமாகவும் காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு கதையும் இருக்கும். அந்த வகையில் அதர்வா மற்றும் அதிதி வைத்து காதல் ரொமான்டிக் படத்தை கொடுக்கப் போகிறார். அடுத்ததாக சூர்யாவின் 43வது படமான புறநானூறு படத்தில் இவர்தான் நடிக்கப் போவதாக இருந்தது.

ஆனால் தற்போது இப்படம் இழுவையில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் வெளிவருமா என்பது சந்தேகம்தான். அத்துடன் விஷால்க்கு ஜோடியாக நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் தனக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது என்ற எண்ணத்தினால் என்னமோ, இதுவரை ஒரு படத்துக்காக 35 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த அதிதி இனி நடிக்கப் போகும் படத்துக்கு 50 லட்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

நடிச்சது என்னமோ ரெண்டே ரெண்டு படம் தான். ஆனால் அதுக்குள்ளயும் சம்பளத்தை டிமாண்ட் பண்ணும் அளவிற்கு கரராக இருக்கிறார் என்றால் எல்லாம் வாரிசு நடிகை என்ற மெதப்பில் தான் ஒவ்வொரு ஆட்டம் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பேசிக்கொள்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்