புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எய்ட்ஸ் நோய்.. உடஞ்சே போயிட்டேன்.. சூப்பர்ஸ்டார் தான் ஒரே ஆறுதல்..

நடிகை அதிதிபாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படத்தில் அதிதி பாலன் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த படத்தை பார்த்து அழைத்தவர்களே இருக்கமாட்டார்கள். அப்படியான ஒரு நடிப்பை தான் வெளிப்படுத்திருப்பர். அருவி படத்திற்கு தனக்கு கிடைத்த வரவேற்பு இன்றளவும் அவருக்கு ஆச்சரியமான ஒன்றாக தான் இருக்கிறது என்றுமே அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் தான் ஒரே ஸ்டார்

அந்த படத்தை பற்றி பேசிய அதிதி பாலன், “அருவி என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டது. குறிப்பாக அந்தப் படத்தில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, முடியை வெட்டி இருப்பது போன்ற காட்சி இருக்கும். அந்தக் காட்சியை நாங்கள் ஒரு குடிசை வீட்டில் தான் எடுத்தோம் அந்தக்காட்சியை எடுக்கும் போது, அந்தப்படத்தின் கேமராமேன் அங்கு கேமராவை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.”

“அந்த குடிசைக்குள் நானும் இயக்குநர் அருணும் மட்டும்தான் இருந்தோம். அந்தக்காட்சியை நாங்கள் ஒரே டேக்கில் எடுத்து முடித்தோம். அந்தக்காட்சிக்காக நான் உடல் இளைத்தேன், முடியை வெட்டிக்கொண்டேன். ஒரு பெண்ணிற்கு முடிதான் அழகின் பிரதானம். அதையே வெட்ட சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது படப்பிடிப்பில் அவர்கள் முடியை வெட்டும் பொழுது என் நெஞ்சே உடைந்துவிட்டது.”

ஆனால் அதற்கு பலன் கிடைத்தது. ரஜினி சார் என்னை ஃபிலிம் இன்ஸிடியூட்டில் படித்து விட்டு நடிக்க வந்தீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அப்படியா? அங்கு செல்லாமலேயே நீங்கள் இப்படி நடித்தால் நாங்களெல்லாம் எங்கே செல்வது என்றார். இயக்குனரிடம் இந்த பெண்ணை எதற்காக இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள்? எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த சீனை எப்படி எடுத்தீர்கள்?

“இந்த சீனை எப்படி எடுத்தீர்கள் என்று அவ்வளவு ஆர்வமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த வயதிலும் தொழிலை கற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வத்தை பார்த்து நான் வியந்தேன். அப்போது தான் முடி வெட்டியது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று புரிந்துகொண்டேன்.. அவருடைய பாராட்டு தான் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

Trending News