வசூல் சாதனை படைக்கும் சோழர்கள்.. பொன்னியின் செல்வன் 2 கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்

மணிரத்தினம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 கடந்த 28ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இந்த வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் படம் வெளியான மூன்றாவது நாளிலேயே 100 கோடியை வசூலித்திருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் பிறகு நான்காவது நாளான நேற்றும் இதன் வசூல் 150 கோடியை தாண்டி இருந்தது.

Also read: 2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி பொன்னியின் செல்வன் 2 உலகம் முழுவதிலும் 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றி தான். ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இப்போது வரை ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் மணிரத்தினம் மேல் எழுந்து வருகிறது.

அதிலும் கல்கியின் நாவலை அவர் எப்படி தன் இஷ்டத்திற்கு மாற்றலாம் எனவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனாலேயே படத்திற்கான வசூல் சற்று மந்தமடையும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கும் வகையில் இருக்கிறது இந்த வசூல் ரிப்போர்ட்.

Also read: இளம் குந்தவை இந்த சீரியல் நடிகையின் மகளா.? குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படம்

அந்த வகையில் சோழர்களின் இந்த வசூல் சாதனையை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விக்ரம் இதை தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து தடைகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்து நிற்கிறது என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் எந்த நெகட்டிவ் விமர்சனங்களும் எங்களை பாதிக்காது என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ponniyin-selvan2-vikram
ponniyin-selvan2-vikram

இப்படி நாளுக்கு நாள் வசூல் வேட்டையாடும் பொன்னியின் செல்வன் 2 இனிவரும் நாட்களிலும் பெரும் சாதனை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் நேற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் புது ட்ரெய்லர் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. அதில் படத்தில் இருக்கும் பல சஸ்பென்ஸ் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இதன் மூலம் வசூலை தூக்கி நிறுத்த லைக்கா பிளான் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: இணையத்தை கலக்கும் வானதி-பூங்குழலி.. படு கிளாமராக பொன்னியின் செல்வன் ஹீரோயின்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்