வெற்றியை தொலைத்து இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்.. உச்சகட்ட விரக்தியில் அதர்வா

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சினிமாவைப் பொறுத்த வரையில் எப்போது தங்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறதோ அதை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குதான் தொடர்ந்து படம் வருகிறது என்று அசால்டாக இருந்தால் சில காலங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அதுதான் தற்போது அதர்வாவுக்கும் நிகழ்ந்துள்ளது.

பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு ஒரு நேரத்தில் தொடர்ந்து படங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால் அப்போது அதை எல்லாம் அதர்வா உதாசீனப்படுத்தி இருந்தார். நடிகர் முரளியின் மகன் என்பதால் இவருக்கு சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்து விட்டது.

ஆனால் அதை அதர்வா தக்கவைத்துக் கொள்ளவில்லை. இடையில் தன் அப்பா பெயரை கெடுக்கும் அளவிற்கு சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். அதாவது அதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தயாரிப்பாளர்களுக்கும் இவருக்கும் இருந்து ஏகப்பட்ட பிரச்சனை வருவதாக கூறிவருகின்றனர்.

மேலும் அளவுக்கு அதிகமாக குடிப்பதாகவும், சிலசமயங்களில் படப்பிடிப்புக்கே போதையில் வருவதாகவும் செய்திகள் இணையத்தில் வெளியானது. இதனால் அதர்வாவின் பட வாய்ப்புகள் எல்லாம் பறிபோனது. அதுமட்டுமன்றி தயாரிப்பாளர்கள் அதர்வாவுக்கு படம் கொடுக்கவே பயப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அதர்வா குருதி ஆட்டம் படத்தை மட்டுமே நம்பி உள்ளார். 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தற்போது வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி குருதி ஆட்டம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்நிலையில் குருதி ஆட்டம் படம் வெற்றியை கொடுத்தால் மட்டுமே அதர்வா சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும்.

- Advertisement -