புடவையில் தலைகீழாக பல்டி அடிக்கும் பிரபுதேவா பட நடிகை.. அதா சர்மா வைரலாகும் வீடியோ!

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா. இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதா ஷர்மா தனது பள்ளிப்படிப்பை முடித்த உடனே நடிக்கத் தொடங்கி விட்டாராம். ஆம், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பாலிவுட்  படமான ‘1920’ என்ற படத்தில் தீவிர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.

இந்த நிலையில் அதா சர்மா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் அதா ஷர்மா ஒரு சீருடை பயிற்சியாளராம். அதுமட்டுமில்லாமல், தனது மூன்றாவது  வயதிலிருந்தே நடனம் ஆட தொடங்கி விட்டாராம் அதா சர்மா.

Adah-Sharma-cinemapettai

மேலும் அதா மும்பையில் உள்ள நடராஜ் கோபிகிருஷ்ணா கதக் நடன அகாதமியில், கதக் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடனத்தின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சால்சா நடனம் கற்றுள்ளாராம். அதேபோல் ஜாஸ், பாலே, பெல்லி டான்ஸ் போன்ற பல நடனங்களை கற்று தனது கைவசம் வைத்துள்ளார்.

தற்போது அதா சர்மா கடற்கரையில் சேலையில் அசால்டாக குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தீ போல் பரவி, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஒரு அழகு! என்ன ஒரு ஸ்டைல்!’ என்று கமென்ட் அடித்து வருகின்றனராம்.

adah-sharma
adah-sharma

மேலும் இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்