அட்வான்ஸ் வாங்கி இரண்டு வருஷமாய் டபாய்த்த விஷால்.. தூண்டில்ல சிக்காதவருக்கு தயாரிப்பாளர் போட்ட வலை

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

விஷாலை பொருத்தவரைக்கும் கடந்த சில வருடங்களாக அவருக்கு வெற்றி படங்கள் எதுவுமே அமையவில்லை. சமீபத்தில் வெளியான எனிமி, லத்தி போன்ற திரைப்படங்களை அவர் ரொம்பவும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே இவருக்கு காலை வாரிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.

Also Read: விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான். தனக்கு வெற்றி படம் கொடுத்த இயக்குனர் மிஸ்கின் உடனே இவர் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தினார். இதற்கிடையில் அதேபோல் ஸ்டோன் பெஞ்சர்ஸ் ப்ரொடக்சன் நிறுவனத்திடமும் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார் இவர்.

அதாவது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்திடம் விஷால் படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒப்பந்தமான கையோடு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிக் கொண்டு டிமிக்கி கொடுத்து விட்டார் இவர். இயக்குனர் முத்தையா இந்த நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்திருக்கிறது. ஆனால் அவர் ஆர்யாவின் படத்தை இயக்க சென்று விட்டார்.

Also Read: கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

பின்னர் இயக்குனர் பொன்ராம், ஸ்டோன் பெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்திருக்கிறது. ஆனால் அது எடுபடவில்லை. பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி எனும் படத்தை இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கியிருக்கிறார். நடிகர் விஷாலும் இந்த நிறுவனத்திடம் பதில் எதுவும் சொல்லாமல் இரண்டு வருடங்களாக டபாய்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் பாண்டிராஜிடம் இதைப்பற்றி பேசி விஷாலை வலை விரித்து பிடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விஷாலும் பாண்டிராஜுடன் அடுத்த படத்தில் இணைவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Also Read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!