5 படங்களில் மட்டும் நடித்துவிட்டு முழுக்கு போட்ட நடிகை.. ஜோதிகாவை ஓட ஓடவிட்ட சினேகிதி

Actress Tabu: பெரும்பாலும் நடிகைகள் தன் நடிக்கும் படங்கள் மூலம் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டால் தொடர்ந்து அதே பார்முலாவை பயன்படுத்தி நடித்து வெற்றி பெறுவார்கள். அதே மாதிரி அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் ரீச் இல்லையென்றால் உடனே அக்கட தேசத்திற்கு பறந்து போய் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை கொடுத்து விடுவார்கள்.

அப்படித்தான் ஒரு நடிகையும் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்துவிட்டு அதோடு தமிழுக்கு குட் பாய் சொல்லிவிட்டு பறந்து போய் விட்டார். அவர் வேறு யாரும் இல்லை காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தபு தான். இவர் தமிழில் அறிமுகமான படமே காதல் நிறைந்த பிரண்ட்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் மக்களின் பேவரைட் படமாக வெற்றி பெற்றது.

அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அடுத்து அர்ஜுன் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தாயின் மணிக்கொடி படத்தில் அஞ்சலி கேரக்டரில் தபு நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களிலுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பாரே தவிர ஹீரோயினாக இவருக்கு சான்ஸ் கிடைக்காமல் போய்விட்டது.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சௌமியா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் இவருடைய ராசியை வைத்து பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். அதாவது இவருடைய ராசி சரியில்லை என்று ஒதுக்கும் அளவிற்கு இருக்கும்.

இன்னும் சொல்ல போனால் இவருடைய ராசி சரியில்லை என்று இவர் தேர்வு செய்த படத்தின் டைட்டிலை அஜித் ரிஜெக்ட் செய்து இருப்பார். அந்த அளவிற்கு இப்படத்தின் மூலம் நெகட்டிவான விஷயங்கள் இவருக்கு கிடைத்திருக்கும். அதனாலேயே அடுத்தடுத்த படங்கள் இவரை தேடி வராமல் போயிருக்கிறது. இருந்தாலும் தமிழில் கடைசியாக இவர் நடித்த படம் சினேகிதியே. இதிலும் இவர் நெகட்டிவ் கேரக்டரில் தான் நடித்தார்.

இதுதான் இவர் தமிழில் நடித்த கடைசி படம். இதன் பிறகும் தமிழில் பட வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று ஒரேடியாக குட்பாய் சொல்லிவிட்டு பாலிவுட்டிற்கு பறந்து போய்விட்டார். அங்கே போன பிறகு இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. அதை சரியாக பயன்படுத்தி தற்போது வரை நடித்து வருகிறார். ஆனாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் 51 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் தனியாகத்தான் சுற்றி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்